கொரோனா: 3 வயது குழந்தைக்கு தொற்று!

உள்ளூர் செய்திகள் சென்னை
corono 17 - 2026

சென்னையில் 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தில் உள்ள 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக இருந்த 47 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனையடுத்து அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதியாகியுள்ளது. இதில் 3 வயது குழந்தையும் உள்ளது.

5 பேருக்கும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் எண்ணூர் சத்தியவாணி முத்து நகரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.