பெட்ரோல் விலை ஏறிப்போச்சு… வண்டிய கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
srivilliputhur petrol hike protest
srivilliputhur petrol hike protest

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு மாலை போட்டு மாட்டு வண்டியில் ஏற்றியும், இருசக்கர வாகனத்தை மனிதன் இழுத்து செல்வது போன்றும் நூதன போராட்டம் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேலையின்றி ஏராளமான பொதுமக்கள் உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் உயர்ந்து வருவதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகாராஜபுரம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி அழகிரிசாமி தலைமையில் இரு சக்கர வாகனத்திற்கு மாலையிட்டு மாட்டு வண்டியில் ஏற்றியும், இரு சக்கர வாகனத்தை மனிதன் கயிறு கட்டி இழுத்துச் செல்வது போன்றும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.