அதிமுக பொதுக்குழு வழக்கு முழு விவரம்..

500x300 827908 chennaihighcourt - 2026

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தநிலையில் இபிஸ் தரப்பில் சட்டரீதியான ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் 23-ந் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூடியது. பொதுக்குழு இதில் ஒற்றை தலைமை கொண்டுவர தீர்மானம் இயற்றப்படலாம் என்ற சந்தேகத்தில்

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார். ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானத்தை தவிர கூடுதல் தீர்மானங்கள் இயற்றக்கூடாது என்ற தடை உத்தரவையும் அவர் பெற்றார், இதையடுத்து ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் மீண்டும் கூடியது. அதில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. தடை கேட்டு வழக்கு இந்த பொதுக்குழு கட்சியின் ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் பெறாமல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார்.

அதேபோல, வைரமுத்து என்ற பொதுக்குழு உறுப்பினரும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் விசாரித்தார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் விஜய் நாராயண், வக்கீல் நர்மதா சம்பத், மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வக்கீல்கள் திருமாறன், ராஜலட்சுமி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். தீர்ப்பு அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதி வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது, கட்சி விதிகளில் சில திருத்தங்களை கடந்த 2011-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, அவர் உயிருடன் இருந்த வரை அவை நடைமுறையில் இருந்தது. அவர் மரணத்துக்கு பின்னர் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, அதுதான் இந்த வழக்குகளாக உள்ளது. அ.தி.மு.க., கட்சி விதிகளின்படி, பொதுச்செயலாளர் பதவி காலியாக இருக்கும்போது, தலைமை கழக செயற்குழு உறுப்பினர்கள் கழக பணிகளை ஆற்றுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் நடந்துள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இதற்கு ஜூன் 23-ந் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒப்புதல் அளித்து தீர்மானம் இயற்றப்படவில்லை. அதனால், பொதுச்செயலாளர் பதவிக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள இந்த 2 பதவிகளும் காலியாக இருந்ததால், தலைமை கழக செயற்குழு உறுப்பினர்கள் மூலம் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது என்று எதிர்மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை தீவிரமாக பரிசீலித்தேன். கட்சி விதிகளுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களால் எதிர்காலத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு நடத்தப்படும் தேர்தலில் கூட போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்றால், இந்த சூழ்நிலை எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் வசதியாக அமைந்து விடும். ஒரு புள்ளிவிவரமும் இல்லை .

ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் விருப்பத்தின்படிதான் மாற்றங்களை உருவாக்க வேண்டும். தலைவர்களின் விருப்பத்துக்காக மாற்றக்கூடாது. எதிர்மனுதாரர்களின் கருத்துப்படி, இரட்டை தலைமையின் காரணமாக கட்சியை நிர்வகிக்க முடியவில்லை. அதனால் ஒற்றை தலைமை வேண்டும் என்று அடிமட்ட தொண்டர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். விரும்புகின்றனர் என்று கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு எந்த ஒரு புள்ளிவிவரமும் இல்லை. குறிப்பாக இதே இரட்டை தலைமை முதல்-அமைச்சராகவும், துணை முதல்-அமைச்சராகவும் பதவி வகித்து சுமார் நாலரை ஆண்டுகள் வெற்றிக்கரமாக அரசாங்கத்தை நடத்தியுள்ளது. ஆய்வு செய்ய வேண்டும் ஏன் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து கட்சியின் பல முடிவுகளை எடுத்துள்ளனர். தேர்தல் கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட முடிவுகளையும் எடுத்துள்ளனர். அப்படி இருக்கும்போது, திடீரென கடந்த ஜூன் 20-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதிக்குள் கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும் என்று ஒன்றரை கோடி தொண்டர்கள் எப்படி முடிவு செய்தனர்? அதுவும் 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் இந்த முடிவை தொண்டர்கள் எடுத்துள்ளனர்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

எனவே, இந்த 2,500 உறுப்பினர்களின் முடிவு தொண்டர்களின் முடிவை பிரதிபலிக்கிறதா? என்பதை கட்சியின் விதிகளை பின்பற்றி ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது. இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் ஜூலை 11-ந் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் அதிகாரம் உள்ள நபரால் கூட்டப்படவில்லை. இந்த கூட்டத்தை அனுமதித்தால், கட்சியின் தொண்டர்கள் பாதிக்கப்படுவார்கள். தலைவர்களின் மாறுபட்ட கருத்தினால், அண்மையில் கூட உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் சின்னத்தை பெற்று போட்டியிட முடியாத நிலைக்கு வேட்பாளர்கள் தள்ளப்பட்டனர் என்று ஆதார ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே கீழ்கண்ட உத்தரவை பிறப்பிக்கிறேன். அ.தி.மு.க. விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். தற்காலிக அவைத்தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தாலும் 5-ல் ஒரு பகுதியினர் ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்குதான் கோரிக்கை மனு கொடுக்க வேண்டும்.

பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அதிகாரமே இல்லாத அவைத்தலைவருக்குத்தான் 5-ல் ஒரு பகுதியினர் கூட்டத்தை கூட்ட கோரிக்கை கடிதம் கொடுத்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு கடிதம் கொடுத்து அதில் ஒருவர் மறுப்பு தெரிவித்தால் கூட, சட்டவிரோதமாக பொதுக்குழுவை கூட்ட முடியாது. ஜூலை 11-ந் தேதி நடந்த பொதுக்குழு தகுதியான நபராலோ அல்லது 15 நாட்கள் முன்னறிவிப்பு செய்தோ கூட்டப்படவில்லை. எனவே, ஜூன் 23-ந் தேதிக்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறுவதற்கு எவ்வித அடிப்படை காரணமும் இல்லை. அவ்வாறு கூறுவது கற்பனையானது. கட்சி விதிகளை மீறி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூடி மறைக்கும் வகையில் அந்த வாதம் முன்வைக்கப்பட்டு உள்ளது. செல்லாது அரசியல் கட்சி தலைமை எடுக்கும் முடிவில் கோர்ட்டு தலையிட முடியாது. அதேசமயம் அந்த நடைமுறையில் மீறல் இருந்தால் கோர்ட்டில் நிவாரணம் கோர எவ்வித தடையும் இல்லை.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

அதனால் ஜூலை 11-ந் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. செல்லாத அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர அனுமதித்தால் கட்சி தொண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஜூன் 23-ந் தேதிக்கு முன்பு இருந்த நிலையே கட்சியில் தொடர வேண்டும். இரு தலைவர்களின் ஒப்புதலும் இல்லாமல் எந்த பொதுக்குழு, செயற்குழுவும் கூட்டக்கூடாது. ஒற்றை தலைமை குறித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்வது உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்கு பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்ட தடை இல்லை. கோர்ட்டை நாடலாம் 5-ல் ஒரு பகுதியினர் முறையாக கடிதம் கொடுத்து பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரினால் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ மறுக்கக்கூடாது. ஒருவேளை இருவருக்கு இடையில் முரண்பாடு இருந்தால், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்கும்படி கோர்ட்டை நாடலாம். 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கட்சி விதிகளின்படி 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும். கூட்டத்தை கூட்டுவது குறித்து 15 நாட்களுக்கு முன்பு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு முறையாக எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட வேண்டும். இந்த வழக்குகள் அனைத்தும் முடித்துவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக அமைந்தது.இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்ட தீர்ப்பை முழுவதும் ஆராய்ந்து சட்டரீதியான அடுத்த நடவடிக்கை எடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories