மதுரையில்… கொரோனா அச்சத்தில் இளைஞர் தற்கொலை!

அடடே... அப்படியா? கிரைம் நியூஸ் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai youth suicide
madurai youth suicide

கொரோனா அச்சத்தில் மதுரையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மதுரையில் பரபரப்பு. மதுரை மாவட்டம் சிறுமலை பாத்திமா நகரைச் சேர்ந்த ராஜா (வயது 30). இவர் பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவில் வைகை ஆற்று ஓரத்தில் ஆட்டோ மெக்கானிக் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.

இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கு கொரோனா தாக்கி இருக்குமோ என அச்சத்தில் இவரது ஒர்க்சாப்பில் இன்று அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ராஜா தூக்கில் தொங்குவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கரிமேடு காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த கரிமேடு போலீசார் உடலைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.