கொரோனா: அருப்புக்கோட்டையில் காவலர் உயிரிழப்பு!

சற்றுமுன் தமிழகம்
kavalar-2

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கொரோனோ வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் ஜெயப்பிரகாஷ், கொரனோ தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாவது காவலர் கொரோனோவுக்கு உயிரிழந்திருப்பது, காவல் துறையினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டை நெடுஞ்சாலை ரோந்து பணி பிரிவில் பணியாற்றி வரும் தலைமை காவலர் (45) இவர் மனைவி மற்றும் பத்து வயது மகனுடன் அருப்புக்கோட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்

இந்நிலையில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு நுரையீரல் பாதிப்பு காரணமாக அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இதையடுத்து அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனோ தொற்று இருப்பது உறுதியானது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயபிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

அவரது மனைவிக்கும் மகனுக்கும் சில தினங்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கும் கொரோனோ உறுதி செய்யப்பட்டு அவர்கள் இருவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.