திருப்பதி கோவிலுக்கு 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள, இன்னோவா கார் நன்கொடை!

இந்தியா சற்றுமுன்
Thirupathi 1
Thirupathi 1

திருமலை ஏழுமலையானுக்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ‘இன்னோவா’ கார் நன்கொடையாக வழங்கப்பட்டது.

திருமலை ஏழுமலையானுக்கு, திருப்பதியில் உள்ள ஹர்ஷா டயோட்டா நிறுவனத்தினர், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா காரை, நேற்று நன்கொடையாக வழங்கினர்.

காருக்கு மாவிலை, சந்தன குங்குமம் இட்டு, அலங்கரித்து பூஜை செய்து, பழங்கள் படைத்து வழிபட்டு, அதிகாரிகள் அதன் சாவியை பெற்றுக் கொண்டனர்.

கொரோனா பீதி மற்றும் கட்டுப்பாடு காரணமாக, திருமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில், 85 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலானது.

கடந்த ஜூன் மாதம் ஊரடங்கிற்கு பின் துவங்கப்பட்ட ஏழுமலையான் தரிசனத்தின் போது, உண்டியல் வருவாய் லட்சங்களிலிருந்து, கோடியை தொட்டு சராசரியானது. தற்போது மீண்டும் சிறிது சிறிதாக குறைந்து, லட்சத்திற்கு சரிந்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.