December 6, 2025, 7:29 AM
23.8 C
Chennai

ஆன்லைன் வகுப்பு: புதிய நெறிமுறைகள்! தமிழக அரசு அறிவிப்பு!

online class
online class

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்புத் தொடங்கியதில் இருந்து லாக்டவுன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் என வழக்கமான இயல்பு வாழ்க்கை மாறிவிட்டது.

பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்துவிதமான கல்வி நிலையங்களிலும் ஆன்லைன் (online classes) மூலமாக பாடம் நடத்துவது இயல்பாக, கொரோனா வைரஸ் பரவல் முக்கிய காரணமானது. தற்போது முதல் வகுப்பு படிக்கும் குழந்தையும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி கற்கின்றனர்.

இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகக்கூட மாணவர்களை பாலியல் ரீதியாக சீண்டும் சம்பவங்கள் வெளியாகி, பல்வேறு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணக்கர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இனிமேல் அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் அந்தந்த பள்ளி நிர்வாகங்களால் பதிவு செய்யப்பட்டு அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பு தொடர்பான காட்சிகளை, பள்ளி நிர்வாகம் (school administration) மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் (parent-teacher association) என இருவரும் அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைத் தவிர்ப்பதற்காக ஒரு நிலையான இயக்க நடைமுறையை கொண்டுவர ஒரு குழுவை அமைப்பதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி ஆணையர், கல்லூரிக் கல்வி இயக்குநர், நிபுணர்கள், உளவியலாளர்கள் (psychologists), கல்வியாளர்கள், சைபர் கிரைம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் (crimes against women and children)குறித்து நிபுணத்துவம் பெற்ற காவல்துறை அதிகாரிகள் குழுவில் ஒரு பகுதியாக இருப்பார்கள்.

பாலியல் தொல்லை குறித்து புகார் அளிப்பதற்காக மாணவர்களுக்கு ஹெல்ப்லைன் எண் ஒன்று உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பதிவுசெய்யப்படும் வழக்குகளில் குற்றம் சாட்டப்ட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் (POCSO Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முக்கியமாக, இது போன்ற புகார்களில், மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் புகார்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories