ஆந்திராவில் அதிர்ச்சி! கொரோனா நோயாளிகள் 150 பேர் ‘மிஸ்ஸிங்’!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
corona-patients-missing
corona-patients-missing

ஆந்திர பிரதேஷ் பிரகாசம் மாவட்டத்தில் 150 பேர் கொரோனா நோயாளிகள் மிஸ்ஸிங்.

அண்மையில் செய்த கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்தவர்கள் காணாமல் போனார்கள். ஆதார் கார்டில் கொடுக்கப்பட்ட முகவரிகளில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாமல் போனதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரகாசம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் காணாமல் போனது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. மாவட்டத்தில் 150 பேர் கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

அண்மையில் செய்த கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்தவர்கள் காணாமல் போனார்கள் .ஆதார் கார்டுகளில் கொடுக்கப்பட்ட அட்ரஸில் நோயாளிகள் இல்லாமல் போனதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பதிவு செய்த போன் நம்பர் கூட சுவிட்ச் ஆப் ஆக உள்ளது. இந்த 150 பேரின் விவரங்களை கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இதனால் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் சிசிஎஸ் போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் மொத்தம் 300 பேருக்கு மேலாக பாதிக்கப்பட்டவர்ள் தம் முகவரிகளை தவறாக அளித்துள்ளனர். அவர்களில் சிலருக்கு நெகடிவ் ரிப்போர்ட்டுகள் வந்தன. 200க்கும் மேலாக ரிப்போர்ட் வந்த நோயாளிகளின் அட்ரஸ் கண்டு பிடிக்க முடியவில்லை. கொரோனா பாசிடிவ் வந்த 150 பேரை சிசிஎஸ் போலீசார் மும்முரமாக தேடி வருகிறார்கள். அவர்கள் மக்களோடு சேர்ந்து போனால் பிரச்சனை ஏற்படும் என்று அதிகாரிகள் டென்ஷனில் உள்ளார்கள்.

விரைவிலேயே அவர்களை பிடிப்பதற்கு போலீசார் மும்முரமாக உள்ளனர். அவர்களின் பரிசோதனையின் போது கொடுத்த விவரங்களின் ஆதாரமாக தேடும் வேட்டையில் இறங்கி உள்ளார்கள்.

முன்புகூட திருப்பதியில் இதேபோல் நடந்தது. நிறைய பேர் பரிசோதனையின் போது தவறான அட்ரசுகளும் தவறான போன் நம்பர்களும் கொடுத்து அதிகாரிகளை ஏமாற்றினார்கள். அங்கு கூட நிறைய பேர் அடையாளம் கிடைக்கவில்லை. இதனால் அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்கள். போலீசாரை அணுகியுள்ளார்கள். சிலரின் அடையாளம் கண்டறியப்பட்டாலும் பலரின் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் அதே போல் பிரகாசம் ஜில்லாவில் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.