பீலா ராஜேஷின் தந்தை மறைவு! ஓபிஎஸ் இரங்கல்!

சற்றுமுன் தமிழகம்
beeularajesh

வணிக வரி செயலர் பீலா ராஜேஷின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான வெங்கடேசன் மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத் துறையின் செயலாளராக செயலாற்றிய டாக்டர் பீலா ராஜேஷ் அவர்களின் தந்தையும், சாத்தான்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராணி வெங்கடேசனின் கணவருமான LN வெங்கடேசன் ஐபிஎஸ் இன்று காலமானார். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள வாழையடி கிராமத்தை பூர்விகமாக கொண்ட இவர் முன்னாள் டிஜிபி அதிகாரியாவார்.

இந்நிலையில், பீலா ராஜேஷின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஓபிஎஸ், தனது ட்விட்டர் பக்கத்தில்,

அவரது பிரிவால் துயருற்று இருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.