காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்; திரையுலகினர் இரங்கல்!

சினி நியூஸ் சினிமா

போதிய பண வசதி இன்றி இன்று சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார்.

உடல்நலக்குறைவால் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் அடைந்தார். அவரின் திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். டிவிட்டர் பதிவுகளில் அவருக்கு இரங்கல் தெரிவித்து பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர் 

06102df2d6f3562f78b4d42a6850de12 - 2026

மதுரையை பூர்வீமாக கொண்ட பாலாஜி, மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்டாக தன் வாழ்க்கையை தொடங்கினார். விஜய் டிவி.,யில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். வடிவேலு பாணியில் இவர் செய்த காமெடிகள் பிரபலமானதால் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டார். 

இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு அதனால் இரு கைகளும் வாதத்தால் முடங்கியது. இதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், பின்னர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். போதிய பண வசதி இன்றி இன்று சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

அவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

 

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.