திரையரங்குகளைத் திறக்க உதவி செய்க: அரசுக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

சற்றுமுன் சினி நியூஸ் திருச்சி லைஃப் ஸ்டைல்
meenatchi sundaram theatre sangam - 2026

தமிழக அளவில் 900 திரையரங்குகள் உள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்றினால், அந்த திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாகவும், அரசு தனிக் கவனம் செலுத்தி சுகாதார முறையில், பாதுகாப்பான வழியில் திரையரங்குகளை திறக்க உதவி செய்யுமாறும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் துணை தலைவரும், திருச்சி, தஞ்சை திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான மீனாட்சி சுந்தரம், கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், திரையரங்கு தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, தயாரிப்பாளர்கள் எப்படியும் அந்த திரைப்படங்களை வெளியிட்டு லாபம் பார்க்க வேண்டுமென்றால். அந்த திரையரங்குகள் மூலம் தான் இயங்க முடியும்.

ஆகவே இந்த திரையரங்குகளை நம்பியுள்ள 25 ஆயிரம் ஊழியர்களின் வாழ்வாதாரத்தினையும் அரசு காத்திடவேண்டும். அரசு எப்படி பேருந்து மற்றும் தொடர் வண்டிகளை குறிப்பிட்ட விதிகளின் படி அனுப்ப ஆயத்தமாகின்றதோ, அதே போல, திரையரங்குகளையும், கொரோனா வைரஸ் பரவாமல் மக்களை காத்திடும் பொருட்டு, சுகாதார துறை வழிமுறைகளை பின்பற்றி அரசு இந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஒரு வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், ஏற்கனவே, சுமார் 2 மாத காலமாகியும் பூட்டப்பட்ட திரையரங்குகளினால், எலிகள், திரையரங்குகளில் உள்ள சீட்டுகளை கொதறியும், ஆங்காங்கே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.

ஒரு திரையரங்கிற்கு சுமார் 3 லட்சம் என்றால் 900 திரையரங்குகளுக்கு பல கோடி ஆகின்றது. மேலும், திரையரங்குகளுக்கு கட்ட வேண்டிய மின்சார தொகை இன்றும் கட்டப்படவில்லை, ஆகவே கூடுதல் கால அவகாசம் கொடுத்துள்ளார்களே தவிர அந்த மின்கட்டணம் தள்ளுபடி செய்யப்படவில்லை.,

ஆகவே மற்றதுறைகளுக்கு எப்படி சலுகைகளுடன் பாதுகாப்புகள் அடங்கிய, வழிமுறையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் புதிய யுத்திகளை கையாண்டு, அந்த துறைகளை காக்க முன்வருகின்றதோ, அதே போல, இந்த திரையரங்கு தொழிலாளர்களையும், திரையரங்குகளை நம்பிய மறைமுக தொழிலாளர்களையும், காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள், மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க துணை தலைவர் மற்றும் திருச்சி, தஞ்சை திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.