தன்னுடைய இரட்டை குழந்தைகளில் ஒன்று தன்னுடைய குழந்தை அல்ல என்று டி.என்.ஏ ரிப்போர்ட்டில் தெரிய வந்ததால் தந்தை ஒருவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சீன நாட்டில் புதிதாக பிறந்த குழந்தைகளின் பிறப்புகளை பதிவு செய்வதற்காக டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்துவது வழக்கம். அந்த விதத்தில் அடையாளம் வெளியிடாத தம்பதியினருக்கு புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளை டி.என்.ஏ பரிசோதனை செய்த போது அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பார்த்ததாக பெய்ஜிங் மாகாண தடயவியல் ஆய்வாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.
அந்த குழந்தைகள் குறித்த டி.என்.ஏ ரிப்போர்ட்டை பெற்றுக் கொண்ட தந்தை அதைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனென்றால் பிறந்த குழந்தைகளில் ஒன்று அவருடையது என்றும் மற்றொரு குழந்தை அவருடையது அல்ல என்றும் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது .
டி.என்.ஏ மாறுபாடு உள்ளதால், ஒரு குழந்தை வேறொருவரிடம் ஏற்பட்ட உறவு மூலம் பிறந்தது என்று சொல்லப்படுகின்றது