டாஸ்மாக் திறப்பு.. மேலும் 2 மணி நேரம் நீட்டிப்பு!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
tasmac time exends

டாஸ்மாக்கில் இரவு 7 மணி வரை மது விற்பனை. செய்யலாம் என்று அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை என இருந்த நிலையில், இரவு 7 மணி வரை மதுவிற்கலாம் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதை அடுத்து காலை 10 மணி முதல் இரவு 7மணி வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, மதுபானங்களை வாங்கலாம் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.

முன்னதாக, ஒரு நாளுக்கு 500 பேருக்கு தான் டோக்கன் தரப்படும் என்றும், வண்ண வண்ண டோக்கன்களில் நேரம் அச்சிடப் பட்டிருக்கும் என்றும், அந்த நேரத்துக்கு வந்து வாங்கிச் செல்லலாம் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. அந்த அறிவிப்பின் படி, தமிழகத்தில் டாஸ்மாக் மறு திறப்பை அடுத்து சனிக்கிழமை முதல் நாள் விற்பனை 163 கோடி ரூபாய்க்கு இருந்தது.

சென்னை மண்டலம் ரூ. 4.2காேடி
திருச்சி மண்டலம் ரூ 40.5 காேடி
மதுரை மண்டலம் 44.7 காேடி
சேலம் மண்டலம் – 41.07 காேடி
காேவை மண்டலம் – 33 .05 காேடி என முதல் நாள் விற்பனை களை கட்டியது. இந்நிலையில், கூடுதல் அவகாசம் கொடுத்து இரவு 7 மணி வரை மது பானங்கள் வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.