இந்தியாவிற்கும் பிரதமருக்கும் நன்றி: டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ்!

உலகம் பொது தகவல்கள்
tedros-adhanom
tedros-adhanom

கொரோனா வைரஸுக்கு எதிராக உலக அளவில் ஆதரவளித்த இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு அவ்வப்போது பாராட்டி வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,

‘கொரோனா வைரஸுக்கு எதிராக உலகளாவிய ஆதரவு அளித்த இந்தியா மற்றும் இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் நம் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸைத் தடுக்க முடியும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.