
விருதுநகர் – ராஜபாளையம் – தென்காசி – செங்கோட்டை வழியாக இயங்கும் ரயில்களில் இயக்க மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக
இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
01.04.2025 முதல் 30.04.2025 வரை (ஞாயிறு தவிர)
வண்டி எண்: 56719 மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் &
வண்டி எண்: 56720 செங்கோட்டை-மதுரை-பாசஞ்சர்
தென்காசி-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.(ஞாயிறு தவிர)` இந்த ரயில் தென்காசி நிலையம் வரை சென்று திரும்பும்.
10.04.2025
வண்டி எண்: 16848 செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு வண்டி
அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக திருச்சி/மயிலாடுதுறை செல்லும்.`மதுரை, திண்டுக்கல், மணப்பாறை வழி செல்லாது.
24.04.2025 முதல் 30.04.2025 வரை
வண்டி எண்: 16847 மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு வண்டி
புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகர்/இராஜபாளையம் செல்லும். மணப்பாறை, திண்டுக்கல், மதுரை வழி செல்லாது. பயணிகள் கவனத்தில் கொள்ளவும்.
மேலும் பராமரிப்பு பணி காரணமாக தென்காசி- செங்கோட்டை இடையேயான ரயில்கள் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளது.
தென்காசி – செங்கோட்டை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து மற்ற நாட்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மதுரையில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்படும் வண்டி எண் 56719 மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் தென்காசி – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து மதியம் 2:05 மணிக்கு கிளம்பும் வண்டி எண் 56738 செங்கோட்டை – நெல்லை பயணிகள் ரயில் தென்காசி – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.
நெல்லையில் இருந்து காலை 9:50 மணிக்கு கிளம்பும் வண்டி எண் 56735 நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரெயில் தென்காசி – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் வண்டி எண் : 56720 செங்கோட்டைமதுரை பயணிகள் ரயில் செங்கோட்டை – தென்காசி இடையே ரத்துசெய்யப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அருகே உள்ள ரெயில் நிலையத்திலோ அல்லது என்.டி.இ.எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம் -என தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது