
வண்டி எண் 20683 தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை வாரம் மும்முறை ( ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ) ஆகிய தினங்களில் மட்டும் செல்லும் ரயில் தாம்பரத்தில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50க்கு செங்கோட்டை வரும் ரயிலை கொல்லம் வரை நீடித்தது இயக்க எம்.பி க்கள் வலியுறுத்தி வரும் நிலையில் எப்படி சாத்தியம் என பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த ரயில் தாம்பரம் :9:00pm
விழுப்புரம் :11:00pm
திருப்பாதிரிபுலியூர்:11:40pm
மயிலாடுதுறை :1:08Am
திருவாரூர் :1:50Am
திருத்துறைப்பூண்டி :2:26Am
முத்துப்பேட்டை :2:46Am
பட்டுக்கோட்டை :3:12Am
அறந்தாங்கி:3:55Am
காரைக்குடி:4:48Am
அருப்புக்கோட்டை :6:44Am
விருதுநகர் :7:13Am
திருநெல்வேலி :8:55Am
சேரன்மகாதேவி:9:14Am
கல்லிடைக்குறிச்சி:9:20Am
அம்பாசமுத்திரம்:9:28Am
பாவூர்சத்திரம்:9:53Am
தென்காசி :10:08Am
செங்கோட்டை:10’50Am வருகிறது.
இந்த வண்டி எண் 20684 மாறி செங்கோட்டை இருந்து தாம்பரத்திற்கு வாரம் மும்முறை ( திங்கள், புதன் மற்றும் விவெள்ளி ) ஆகிய தினங்களில் மட்டும் உள்ளது
செங்கோட்டை:4:30pm
தென்காசி:4:42pm
பாவூர்சத்திரம்:4:53pm
அம்பாசமுத்திரம்:5:10pm
கல்லிடைக்குறிச்சி:5:17pm
சேரன்மகாதேவி:5:26pm
திருநெல்வேலி:5:50pm
விருதுநகர்:7:23pm
அருப்புக்கோட்டை:7:48pm
காரைக்குடி:9:33pm
அறந்தாங்கி:9:59pm
பட்டுக்கோட்டை:10:46pm
முத்துப்பேட்டை:11:10pm
திருத்துறைப்பூண்டி:11:30pm
திருவாரூர் :12:05Am மயிலாடுதுறை:12:54Am
திருப்பதிரிபுலியூர்:2:13Am
விழுப்புரம்:3:35Am
தாம்பரம்:6:05Am செல்கிறது.
செங்கோட்டைக்கு காலை 10.50க்கு வரும் நேரம் என்றாலும் காலை11மணிக்கு கொல்லம் புறப்பட்டு பிற்பகல் 3மணி கொல்லம் சென்றடைந்து வண்டி சுத்தம் செய்தல் ஏசி பெட்டிகளில் கேஸ் ஏற்றி தண்ணீர் நிரப்பி புறப்பட குறைந்தது 4மணி நேரம் ஆகும்.இரவு 7மணிக்கு கொல்லத் தில் புறப்பட்டு இரவு 11மணிக்கு செங்கோட்டை வந்து புறப்பட்டு சுற்று வழியில் தாம்பரம் செல்ல பகல் 1மணி ஆகும்.
சாத்தியமில்லாத ஒரு ரயிலை எப்படி கொல்லம் வரை நீடித்தது இயக்க முடியும்.என பயணிகள் கேள்வியாக உள்ளது.இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தபோது தற்போது இயக்க உள்ள தாம்பரம் ராமேஸ்வரம் ரயில் முத்துப்பேட்டை வழி இயங்கும்.
இதனால் தாம்பரம் செங்கோட்டை ரயிலை நேர்வழியில் இயக்கினால் கொல்லம் வரை நீடித்தது இயக்க முடியும் .
சிலம்பு அதிவிரைவு ரயிலையும் தாம்பரம் நாகர்கோவில் ரயிலையும் தினசரி இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.