
அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த 90 வயதான டிக் மீக் என்ற நபரின் மனைவி தான் 87 வயதான ஷிர்லி மீக். இவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி அன்று 70 ஆம் ஆண்டு திருமண நாள் ஆகும். இதனால் அன்றைய தினம் இந்த தம்பதி இவர்களின் திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர்.
ஆனால் அதன் பிறகு மிகுந்த சோகத்தை ஏற்படுத்து வகையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அப்போது இந்த தம்பதியினரின் குடும்பத்தினர் மருத்துவர்களிடம் இவர்கள் இறுதி காலத்தை ஒன்றாக மகிழ்ச்சியாக கழிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.
இதனை அடுத்து வயதான தம்பதியை ஒன்றாக இருக்க மருத்துவமனை நிர்வாகம் ஒப்பு கொண்டனர். இதனால் இருவரும் அவர்களின் கைகளை ஒன்றாக கோர்த்தபடி இருந்தபோது மனைவி ஷிர்லி உயிரிழந்தார்.
இதனை அடுத்து மனைவி இறந்த அடுத்த சில நிமிடங்களில் கணவர் டிக்கினும் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இந்த தம்பதியின் மகன் பெற்றோரின் பிரிவை தாங்க முடியாமல் மிகுந்த வேதனையில் இருந்தார்.
மேலும் இவர்களின் இறப்பு கொரோனாவின் தீவிரம் பற்றி மக்களுக்கு உணர்த்தும் என்றும், மக்கள் எந்த அளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.
மேலும் உயிரிழந்த தம்பதிக்கு இன்னும் மூன்று நாட்களில் தடுப்பூசி செலுத்தப்படுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.