வீட்டில் யாருமில்லை.. குளித்துக் கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம் சில்மிஷம்! மூவர் கைது!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
bath - 2026

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 இளைஞர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே வீட்டில் யாரும் இல்லாத நிலையில் 15 வயது சிறுமி கொல்லைப்புறத்தில் குளித்துக கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சேரன்தோப்பு தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் விமல்ராஜ் (21), ஜான்சேகரன் மகன் சாலமன் (31), காமராஜ் மகன் கலைவாணன் (22) ஆகிய மூவரும் குளித்துக்கொண்டிருந்த சிறுமியின் ஆடைகளை பிடித்து இழுத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சுதாரித்துக் கொண்டு தற்காப்புக்காக தனது கையை தானே கிழித்துக்கொண்டு சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து மூவரும் அங்கிருந்து தப்பியோடினர்.

scoundrels - 2026

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விமல்ராஜ், சாலமன், கலைவாணன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.