தமிழகத்தில் இன்று … 6972 பேருக்கு சீன வைரஸ் தாக்கம்! 88 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
corona-virus-4
corona-virus-4

தமிழகத்தில் இன்று 6972 பேருக்கு சீன வைரஸ் கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது. சீன வைரஸுக்கு தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர்  உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 1107 பேருக்கு சீன வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது 

6972 பேருக்கு சீன வைரஸ் தாக்கம் இன்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில்  பாதிப்பு எண்ணிக்கை 2,27,688ஆக உயந்துள்ளது. அதே நேரம், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் இதையடுத்து  தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,66,956ஆக அதிகரித்துள்ளது. 

இன்று கொரோனாவுக்கு 88 பேர் உயிரிழந்ததை அடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3,659ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று 1107 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96,438ஆக உயர்ந்துள்ளது.

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் தெரியவந்துள்ளது . சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 5865 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.