தெலங்காணாவில் மீண்டும் கொடூரம்! பெண்ணைக் கொன்று எரித்த கயவர்கள்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
telangana woman fired to death1 - 2026
  • தெலங்காணாவில் மீண்டுமொரு கொடூரம்.
  • பெண்ணைக் கொன்று எரித்த கயவர்கள்.
  • பாதி எரிந்து போன நிலையில் ஒரு பெண்ணின் சடலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • முகம் எரிந்து போனதால் அவர் யார் என்பது தெரியவரவில்லை.
  • கொல்வதற்காக பயன்படுத்திய கம்புகளையும் பாறாங்கற்களையும் போலீசார் அடையாளம் கண்டனர்.

ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டு சடலத்தை அடையாளம் காண முடியாமல் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூரமான சம்பவம் விகாரபாத் மாவட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாவட்டத்திலுள்ள பூடூரு மண்டலம் சோமன்குர்த்தி கிராமத்தின் அருகில் 167 வது நம்பர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஸ்டீல் ஃபேக்டரிக்கு அருகில் நெடுஞ்சாலையை ஒட்டி செக்யூரிட்டி போஸ்ட்க்காக கட்டப்பட்ட அறையில் பாதி எரிந்து போன அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின்(35) சடலம் கிடைத்தது.

பெண்ணை கொன்ற கயவர்கள் அவளுடைய இறந்த உடலை அடையாளம் காண முடியாமல் செய்வதற்காக எரித்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

telangana woman fired to death2 - 2026

உள்ளூர் மனிதர்கள் அளித்த செய்திகளைப் பெற்றுக் கொண்டு களத்தில் இறங்கிய போலீஸார் சடலத்தை பரிசீலித்தனர். குளூஸ் டீம், டாக் ஸ்குவாட் அழைத்து வந்து சம்பவ இடத்தில் ஆதாரங்களை சேகரித்தனர். பெண்ணை கம்பால் அடித்து கல்லால் மோதி கொலை செய்துள்ளார்கள் என்றும் அந்த பெண்ணின் அடையாளங்கள் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதால் நெருப்பு வைத்து உள்ளார்கள் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பெண்ணின் சடலம் அருகில் மதுபாட்டில்கள், ரத்தக் கரையோடு கூடிய கம்புகள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். கொலைக்கு உள்ளான பெண் யார்! எதற்கு கொலை செய்தார்கள்? என்ற பல விஷயங்கள் போலீசார் விசாரணையில் தெரிய வர வேண்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.