ஆரோக்கிய சமையல்: மாதுளம் பூ துவையல்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Pomegranate flower
Pomegranate flower

மாதுளம் பூவைத் துவையல் செய்து சாப்பிட்டால் நன்மைகளை அடையலாம்.
தேவையானவை
மாதுளம் பூ-100கிராம்
மிளகு, சீரகம், -தலா 1 டீஸ்பூன்
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு -6 பல்
கறுப்பு உளுந்து-2டீஸ்பூன்
தேங்காய் துருவல் – கையளவு
பச்சை மிளகாய்-2
எண்ணெய் , உப்பு- தேவைக்கு ஏற்ப

Pomegranate flower bath
Pomegranate flower thuvaiyal

செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு வதக்கவும். லேசாக வதங்கியதும் கறுப்பு உளுந்து, தேங்காய் துருவல், நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து இறுதியில் பொடியாக நறுக்கிய மாதுளம் பூவைப் போட்டு வதக்கவும். இதை உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும். இந்த துவையல் உடல் ஆரோக்கியத்திற்கு உன்னதமானது. மாதுளம் பூவைப் போட்டு வதக்க ஆரம்பித்ததும், நீண்ட நேரம் அடுப்பில் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால், மாதுளம் பூவின் சத்துக்கள் குறைந்து விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.