ரூ.1200 கோடியில்… கட்டப்பட்ட கருணாநிதியின் மாளிகை… இதுதானோ?!

உரத்த சிந்தனை
ptr thyagaran - 2026

நம்ம வரிப்பணத்துல பிரதமர் மோடி அவருக்கு வீடு கட்டிகிட்டிருக்கார்னு தமிழக நிதி அமைச்சர் பேட்டி கொடுத்திருக்கார் –

அப்ப, 2008 ல ஓமந்தூரார் வளாகத்துல எங்களோட வரிப்பணம் 1200 கோடி ரூபாய் செலவுல கருணாநிதி கட்டின அந்த பாண்டிச்சேரி போலீஸ் தொப்பி மாதிரி ஒரு கேவலமான கட்டிடம் என்ன கருணாநிதி வீடா?-

கிட்டத்தட்ட 13 வருஷத்துக்கு முன்னாடியே வெறும் 300+ சட்டமன்ற உறுப்பினர்கள் கூடுவதற்காக கட்டப்பட்ட கருணாநிதி வீட்டின் கட்டுமானச் செலவு எவ்வளவு தெரியும் முதல்ல 471 கோடின்னு ஆரம்பிச்சி 1200 கோடில முடிஞ்சது –

ஆனா, 13 வருடங்களுக்குப் பிறகு கட்டிடச் செலவுகள் அதிகமாக இருக்கும் டெல்லியில் 1275 MPக்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுவரும் பிரதமரின் வீட்டின் கட்டுமானச் செலவு எவ்வளவு தெரியுமா? 861.9 கோடி (டாடா நிறுவணம் கட்டுகிறது, 64,500 சதுர மீட்டர்) –

இப்பச் சொல்லுங்க நிதி அமைச்சரே, அப்ப உங்க தலைவர் கருணாநிதி அவருக்கு வீடு கட்டின திட்டத்துலயே ஆட்டையப் போட்டாரா?-

அடுத்ததா பெட்ரோல் விலை பத்தி படு அபத்தமா ஒரு பேட்டி கொடுத்திருக்காரு –

அதாவது மத்திய அரசு வசூலிக்கும் 32.90 ரூபாய் கலால்வரியில் 31.50 ரூபாயை மத்திய அரசு எடுத்துக்கொண்டு வெறும் 1.40 ரூபாயை மட்டும் மாநிலங்களுக்கு வழங்குகிறதுன்னு பேசியிருக்காரு –

எப்படி இவ்வளவு மோசமான அடிப்படை அறிவு கூட இல்லாத அடிமுட்டாள நிதி அமைச்சராக்கினார் ஸ்டாலின்னு அவருக்கே வெளிச்சம்-

அதாவது மத்திய அரசு விதிக்கும் வரி 32.90 ரூபாய்களில் உள்கட்டுமானத் தீர்வை 18+ 2.50 = 20.50 மட்டுமே மத்திய அரசுக்குப் போகிறது, மீதமுள்ள 12.40 மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது –

இதன் படி சாலை மற்றும் உள்கட்டுமான தீர்வை 18-ல் இருந்துதான் நாடெங்கிலும் சாலைகள், பாலங்கள் கட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன அதில்தான் தமிழகத்திற்குக் கூட 123, 000 கோடிக்கு சாலைத் திட்டங்கள் போடப்பட்டுள்ளன –

அடுத்ததாக வேளான் தீர்வை 2.50 ரூபாயிலிருந்துதான் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் 6000 ரூபாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது –

இவையெல்லாம் ஒரு நிதி அமைச்சருக்கு தெரிந்திருக்கா விட்டாலும் மாநில அரசுக்கு வரும் வரியாவது தெரிந்திருக்க வேண்டுமல்லவா?-

அடுத்ததாக, பெட்ரோலுக்கு 15% வாட் வரி மற்றும் 13.02 கூடுதல் கட்டணம் என 28.02 ரூபாய்களை தமிழக அரசுதான் வசூலிக்கிறது –

அதாவது 100 ரூபாய் பெட்ரோலில் வெறும் 20.50 ரூபாய் மட்டுமே மத்திய அரசுக்குப் போகிறது ஆனால் சுளையாக 28.02+12.40 = 40.42 ரூபாய் மாநிலத்திற்கு தான் வருகிறது –

தமிழகத்தின் முக்கிய வருவாய் ஆதரங்களில் இதுவும் ஒன்று, அதிலும் முக்கியமானது, இதில் என்ன நடக்கிறது, எவ்வளவு வரி வருவாய் வருகிறது என்பது கூடத் தெரியாத இந்த தத்தி நிதி அமைச்சர் தான் நமக்கான பட்ஜெட்டைத் தயாரிக்கப் போகிறார் என்பதை நினைக்கும் போதே கண்ணு வேர்க்குது –

  • ந.முத்துராமலிங்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.