தல மரத்தில் ஏற்றப்பட்ட இஸ்லாமிய கொடி! திருப்பரங்குன்றத்தில் அதிகாரிகள் ஆய்வு!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை
thirupparankundram 1 - 2026

தல மரத்தில் இஸ்லாமியர்களின் கொடி ஏற்றப்பட்டு இறக்கப்படாமல் வைக்கப் பட்ட விவகாரத்தில் மதுரை திருப்பரங்குன்ற மலையில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தல மரத்தில் இஸ்லாமியர்கள் சந்தனக்கூடு திருவிழாவின்போது,  ஏற்றப்பட்ட கொடியை இறக்க வலியுறுத்தி அனைத்து இந்து இயக்கங்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து,  இன்று வருவாய் கோட்டாட்சியர்,  வட்டாட்சியர்,  சர்வேயர்கள் மற்றும் காவல் உதவி ஆணையர் திருப்பரங்குன்றம் கோவில் பொறுப்பு துணை ஆணையர் மு. ராமசாமி மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் மலை உச்சியில் சென்று ஆய்வு செய்தனர் .

குதிரை சுனை  பள்ளிவாசல்,  காசி விஸ்வநாதர் ஆலயம்,  நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.