அதுக்குள்ள இன்னொன்றா? சீனாவில் குரங்கு வைரஸால் ஒருவர் உயிரிழப்பு!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
monkeys

சீனாவில் முதன்முறையாக குரங்கு வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதார்.

2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உஹானில் பரவிய கொரோனா இன்று வரை உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும் கூட 2வது அலை, 3-வது அலை தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது.

இது போதாதென்று உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ்களும் பல நாடுகளில் கண்டறியப்பட்டு வருகின்றன.

ஆனால் கொரோனா வைரஸை சீனாவை கட்டுப்படுத்திய விதம் குறித்து இன்றும் உலகம் முழுவதும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

கொடிய தொற்றுநோயை உருவாக்கிய சீனா, இந்த வைரஸை உலகம் முழுவதும் பரப்பிவிட்டு, தனது நாட்டில் மட்டும் வேகமாக கட்டுப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சீனாவில் குரங்கு பி வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பெய்ஜிங்கைச் சேர்ந்த கால்நடை மருத்துவருக்கு முதன்முறையாக இந்த, குரங்கு பி வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

53 வயதான ஆண் கால்நடை, விலங்குகளை ஆராய்ச்சி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்தவர், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் அவருக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது..

அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார் என்றும், இறுதியில் கடந்த மே 27-ம் தேதி இறந்தார் என்று குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் சீனாவில் குரங்கி பி நோய்த்தொற்றுகள் எதுவும் இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது,

ஆகவே, சீனாவில் அடையாளம் காணப்பட்ட முதல் பாதிப்பாக இது கருதப்படுகிறது. அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு நோய்த்தொற்று நெகட்டிவ் என்ற முடிவுகள் வந்திருப்பதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.