Leopard crocodile - 2026

ஒரே பிடியில் சிறுத்தையை வேட்டையாடிய முதலை..! வைரல்!

அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல்
Leopard crocodile - 2026

ட்விட்டரில் வைரலாகியிருக்கும் வீடியோ ஒன்றில், தண்ணீர் குடிக்க வரும் சிறுத்தையை, ராட்ச முதலை ஒன்று லாவகமாக வேட்டையாடி தூக்கிச் செல்கிறது.

அந்த வீடியோவில் இருக்கும் ஒவ்வொரு நொடிகளும் திக் திக் நொடிகளாக நகர்கின்றன.

இரண்டு மூன்று சிறுத்தைகள் கூட்டமாக தண்ணீர் குடிக்க ஒரு நீரோடை அருகே வருகின்றன. முதலை இருக்கும் என்பது அவைகளுக்கு முன்பே தெரிந்திருக்கும்போல.

ஏனென்றால், இரண்டு சிறுத்தை கரையில் பயத்துடன் நிற்க, ஒரயொரு புலி மட்டும் பயந்தவாறு தண்ணீரைக் குடிக்கிறது. தண்ணீருக்குள் இருக்கும் சலம்பல்களை சிறுத்தையாலும் உணர முடிகிறது.

ஏதோ நடக்கப்போகிறது என்ற அச்சத்துடனேயே தண்ணீர் குடிக்கும் சிறுத்தையை, கணப்பொழுதில் நீருக்குள் இருந்து எழுந்த ராட்சத முதலை கவ்விச் செல்கிறது.

நொடிப்பொழுதில் அரங்கேறும் அந்த வேட்டை நிகழ்வை, வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவரையும் திகலடையச் செய்யும். இதனையடுத்து, இரண்டு சிறுத்தைகள் கரையில் நிற்கின்றன. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.