தமிழ் பாடலை ஹிட்டாக்கிய கேரளப் பெண்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
yathi
yathi

கேரள பெண் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஷாப்பிங் மால் முன்பு தமிழ் பாட்டுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாடலிங் துறையில் சாதித்து வரும் பிரியங்கா ஷெனாய் மேனன் என்ற கேரளாவைச் சேர்ந்த இளம்பெண், பெங்களூருவில் உள்ள ஷாப்பிங் மால் முன்பு நீல நிற குர்தா அணிந்தவாறு ‘யாத்தி யாத்தி’ என்ற தமிழ் பாடலுக்கு அருமையாக நடனமாடி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து தற்போது அது வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்தவர்கள் கேரள பெண்ணின் நளினமான ஆட்டத்தை ஆகா ஓகோவென புகழ்ந்து தள்ளுகின்றனர். கேரள பெண்ணின் முக பாவனைகள் மற்றும் நடன அசைவுகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இதுவரை 50,000க்கும் மேற்பட்டோர் இந்த நடன வீடியோவை பார்த்திருக்கின்றனர். 5,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

‘யாத்தி யாத்தி’ பாடல் யாசின் நிசார், அனுராதா ஸ்ரீராம் மற்றும் அபிஷேக் சி.எஸ் ஆகியோர் பாடிய மிகவும் பிரபலமான மியூசிக் வீடியோவாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.