காதலிக்க மறுத்ததால் பெண்ணின் உடலை பிளேடால் கிழித்த கொடூரம்! மாணவர் ஹூசைன் கைது!

அடடே... அப்படியா? இந்தியா கல்வி கிரைம் நியூஸ் சற்றுமுன்
Hussain - 2026

மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துார் மாவட்டத்தில் உள்ள ஃபலகட்டா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சஜோதின் ஹுசைன் என்ற மாணவர், தனது காதலை ஏற்க மறுத்த பெண்ணை பிளேடால் கொடூரமாக கிழித்துள்ளார்.
இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் பெண் கல்லூரி வாயிலை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, சஜோதின் ஹுசைன் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து தாக்கியதுடன், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான பிளேடால் அறுத்துள்ளார். பின் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். இதில் பெண்ணி முகம், மார்பு மற்றும் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டது.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனை கூற்று படி, பெண்ணின் நெற்றி, முகம், மார்பு மற்றும் முதுகில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 35 தையல்களுக்கு மேல் போட வேண்டியிருந்தது என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்; சஜோதின் ஹுசைன் என்னை கடந்த 1 வருடத்திற்கும் மேலாக காதலிக்க சொல்லி வற்புறுத்தினான். நான் அவருடைய காதலை ஏற்க மறுத்ததால் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு தான் உள்ளாகியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தப்பி ஓடிய சஜோதின் ஹுசைனை கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.