Medicinal rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மருந்து சாதம்!

லைஃப் ஸ்டைல் சமையல் புதிது
Medicinal rice - 2026

மருந்து சாதம்
தேவையான பொருட்கள்
பொன்னி புழுங்கல் அரிசி – அரை படி (நாலு ஆழாக்கு)
நல்லெண்ணெய் – 125 கிராம்
தேங்காய் – ஒன்று
இஞ்சி பேஸ்ட் – 50 கிராம்
பூண்டு பேஸ்ட் – 25 கிராம்
மருந்து பொடி – கால் ஆழாக்கு
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
வெங்காயம் – ஐம்பது கிராம்
உளுந்து – ஐம்பது கிராம்
வெல்லம் – கொஞசம்
உரித்த முழு பூண்டு – இரண்டு

செய்முறை
முதலில் அரிசியை தனியாக, உளுந்து தனியாக ஊற வைக்கவும்.
தேங்காயை பால் எடுத்து வைக்கவும்.
எண்ணெயை காய வைத்து ஒரு பெரிய பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும். பிறகு கொத்தமல்லி, புதினா தழை சேர்த்து, பச்சை மிளகாயை ஒடித்து போட்டு முதலில் கொஞ்சமாக தேங்காய் பாலில் மருந்து பொடியை கலக்கி ஊற்ற வேண்டும். பிறகு மொத்த பாலையும் ஒன்றுக்கு இரண்டு வீதம் தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விட்டு கொதிக்கும் போது ஊறிய உளுந்தை போட்டு கட் பண்ணிய பூண்டு, வெல்லம் சேர்த்து அரிசி போட்டு வேகவிட்டு தம் போடவும்.

இந்த மருந்து பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் பெயர் காயப்பொடி. பன்னிரண்டு வகை மருந்துவம் இதில் சேர்ந்துள்ளது. திருநெல்வேலி பக்கம் தயார் செய்கிறார்கள்.

இது பிள்ளை பிறந்த பிறகு இத்துடன் நிறைய பொருட்கள் சேர்த்து லேகியம் போல் செய்வார்கள்,இந்த பொடியில் சாப்பாடும் செய்வார்கள். இது பிள்ளை பெற்றவர்களுக்கு செய்து கொடுப்பார்கள். வயிற்று புண்ணை ஆற்றும். மற்றவர்களும் சாப்பிடலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.