202203020949496379 1 ukraine12. L styvpf - 2026

உக்ரைன் போர் பதட்டத்திலும் ஒரு காதல் கல்யாணம்…

சற்றுமுன்

ஐதராபாத்தை சேர்ந்த பிரதீக் என்ற வாலிபர் உக்ரைனில் தங்கி பணிபுரிந்து வந்தார். அங்கிருந்த போது அவருக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம்பெண் லியுபோவ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நேரத்தில்தான் உக்ரைன் போர் தொடங்கியது. இதை அறிந்ததும் அவர்கள் இருவரும் கடந்த 23-ந் தேதியே உக்ரைனில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு அவர்கள் இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். வாலிபர் பிரதீக்கும் இந்தியாவில் உள்ள பெற்றோருக்கு தகவல் கூறினார். அவர்கள் உடனே இருவரையும் இந்தியா வந்துவிடும்படி அறிவுறுத்தினர்.
அதன்படி போர்முனையில் காதல் திருமணம் செய்த ஜோடி அங்கிருந்து அவசரமாக இந்தியா வந்தனர். ஐதராபாத் வந்தடைந்த இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

202203020949496379 1 ukraine12. L styvpf - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.