dog 3 - 2026

உணவிடும் பெண்ணிற்கு கைப்பிடித்து தேங்ஸ் கூறும் நாய்‌‌.. நெகிழ்ச்சி வீடியோ!

இந்தியா அடடே... அப்படியா?
dog 3 - 2026

ஒரு பெண் தாயுணர்வோடு பசியில் தவித்து கொண்டிருக்கும் நாய்க்குட்டிக்கு உணவளித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பலரது இதயங்களையும் கவர்ந்து வருகிறது.

இதேபோல ஏற்கனவே முதியவர் ஒருவர் சைக்கிளில் உணவினை சுமந்து வந்து தெருக்களில் வசிக்கும் நாய்களுக்கு உணவளித்த வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ட்விட்டர் பக்கத்தில் யோக் என்கிற கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோவுடன் “தாய் நாயானது தனது குட்டிகளுக்கு உணவளித்த பெண்ணுக்கு நன்றி கூறுகிறது” என்ற கேப்ஷனும் பதிவிடப்பட்டு இருக்கிறது.

அந்த வீடியோவில் பெண் ஒருவர் தரையில் படுத்துக்கொண்டிருக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஒரு பையில் உணவை வைத்துக்கொண்டு அந்த நாய்க்குட்டிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணவை அள்ளி போடுகிறார்.

அப்போது அவர் அருகில் நின்ற அந்த நாய்க்குட்டிகள் தாயானது அப்பெண்ணின் பின்னல் சுற்றிக்கொண்டே அவர் உணவு பரிமாறும்போது நன்றி கூறும் விதமாக அப்பெண்ணின் கைகளை பற்றிக்கொண்டு, முகத்தை அவர் கைகளில் பதிக்கிறது.

இந்த வீடியோ காண்போரின் இதயங்களை நெகிழ செய்துள்ளது. மார்ச்-8ம் தேதி பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

ஒரு பயனர் இந்த பெண்ணை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று கமெண்ட் செய்துள்ளார், மற்றொருவர் இது மனதை வருகிறது என்று கூறியுள்ளார். இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவிற்கு ஹார்ட் எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.