குடியுரிமை சட்டத்தை ஆதரித்து… கோலங்கள்! கலக்கும் கிராமத்து மக்கள்!

Published:

kolam supportscaa - 2026

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பல்வேறு கிராமங்களிலும் கோலங்களை வரைந்து வருகின்றனர் மக்கள்.

மார்கழி மாதம் என்பதால், இயல்பாகவே இந்துக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அழகிய கோலங்களைப் போட்டு அழகு பார்ப்பது ஹிந்துக்களின் பழக்கம். இவை கலாசாரத்தின் ஓர் அங்கமாகத் திகழ்கிறது.

இந்துக்களின் கலாசார நடைமுறையை தனது அரசியல் கருத்துக்கான தளமாக்க, நாத்திகவாத ஹிந்து விரோத இஸ்லாமிய கிறிஸ்துவ ஆதரவாளர்களான திமுக., கையில் எடுத்தது. இதற்கு பதிலடி கொடுப்பது போல், பாஜக.,வினரும் தங்கள் எதிர்ப்பைத் தெரியப் படுத்த கோல அரசியலை கையில் எடுத்தது.

இதை அடுத்து, பலரும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து கருத்துகளை கோலங்களில் வரைந்து வைத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ஒரே கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பெண்கள் கோலமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகாவைச் சேர்ந்த ராமநத்தம் கிராமத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பெண்கள் கோலமிட்டுள்ளனர். மேலும், முரசொலி அலுவலக மூலப்பத்திரம் எங்கே என்ற கேள்வியும் கோலத்தில் இடம்பெற்றுள்ளது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

ஆங்கில புத்தாண்டின் முதல் தினத்தன்று இடப்பட்ட கோலத்தில் புத்தாண்டு வாழ்த்துகளுடன், குடியுரிமை சட்டத்திற்கு பொதுமக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

Related articles

Recent articles

spot_img