திருமங்கலத்தில் ரயில் முன் விழுந்து இளைஞர் தற்கொலை! திருமணம் ஆகாத ஏக்கம்!

சற்றுமுன்
train acc - 2026

திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் மொக்கையன். கூலி தொழிலாளி.

இவருடைய மகன் வைரமணி (வயது25). இவர் வேன் டிரைவராக இருந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. வீட்டில் திருமணத்திற்கு பெண்பார்க்க கூறியுள்ளார்.

வீட்டிலும் தீவிரமாக பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் திருமணம் கைகூடி வரவில்லை. தனக்கு திருமணம் ஆகாதது குறித்து நண்பர்களிடம் தெரிவித்து வேதனைப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த வைரமணி நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் மறவன்குளம் அருகே ஓடும் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மதுரை ரெயில்வே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.