IMG 20220311 WA0000 - 2026

விலை அதிகரித்த கேரட்…

சற்றுமுன்

கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு பகுதிகளில் கேரட் அதிகம் விளைகிறது.

மலைக்கிராமங்களான வில்பட்டி,  பள்ளங்கி, பெருமாள்மலை, பேத்துப்பாறை, வடகவுஞ்சி, பூம்பாறை, கூக்கால்,  புதுபுத்தூர், பழம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் கேரட் 3  போகம் விளைவிக்கப்படுகின்றன. இங்கு கொரடா என அழைக்கப்படும் நாட்டு வகை  கேரட், வீரிய வகை கேரட் என இரு தரத்தில் விளைவிக்கப்படுகின்றன. கடந்த சில  ஆண்டுகளாக இரு தர கேரட் பயிர்களும் ரூ.20க்கு மேல் விலை போகாமல் இருந்த நிலையில்  இந்த ஆண்டு வீரிய கேரட் ரூ.60 வரைக்கும், நாட்டு கேரட் ரூ.30 வரைக்கும்  விலை போகிறது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபோல் நாட்டு மாதுளை விலை அதிகம் உள்ளது கிலோ ரூ80விற்ற நாட்டு மாதுளை தற்போது ரூ180வரை விலை நிலவுகிறது.

IMG 20220311 WA0000 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.