Wheat flour onion paniyaram - 2026

ஆரோக்கிய டிபன்: கோதுமை மாவு வெங்காய பணியாரம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Wheat flour onion paniyaram - 2026

கோதுமை மாவு வெங்காய பணியாரம்
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்
பச்சரிசி மாவு – அரை கப்
ரவை – 1/4 கப்
தயிர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1/2 இணுக்கு
பெருங்காயம் – சிறிதளவு
வெங்காயம் – 2.

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கோதுமை மாவு, ரவையையும் தனித்தனியாக போட்டு வறுத்து ஒன்றாகத் திரிக்கவும்.

அரைத்த கோதுமை மாவு, ரவை கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் அரிசிமாவு, தயிர், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் வதக்கிய பொருட்களை கோதுமை மாவு கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுப்பில் குழிப்பணியாரச்சட்டியை வைத்து எண்ணெய் விட்டு கோதுமை மாவை ஒவ்வொரு குழியிலும் விடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான கோதுமை மாவு வெங்காய பணியாரம் தயார்.
மிளகாய்ப்பொடி, தக்காளி சட்னி, சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.