பிப்ரவரி 24, 2021, 10:59 மணி புதன்கிழமை
More

  பூலித்தேவன் 305வது பிறந்த நாள்!

  Home சற்றுமுன் பூலித்தேவன் 305வது பிறந்த நாள்!

  பூலித்தேவன் 305வது பிறந்த நாள்!

  மாவீரர் பூலித்தேவர் 305 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெல்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவர் நினைவு மாளிகையில்

  poolithevanbirthday
  poolithevanbirthday

  தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவனின் 305-வது பிறந்தநாளையொட்டி நெற்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவனின் திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசின் சார்பில், மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  இதே போல தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், வாசுதேவநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் மனோகரன் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி @ குட்டியப்பா ஆகியோர் பூலித்தேவனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

  poolidevar-birthday
  poolidevar-birthday

  இன்று மாவீரர் பூலித்தேவர் 305 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெல்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவர் நினைவு மாளிகையில் தென்காசி மாவட்ட பிஜேபி சார்பில் மாவட்ட தலைவர் மு.ராமராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

  நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவர் பழனிச்சாமி வாசுதேவநல்லூர் ஒன்றிய பொருளாளர் கருணாகரன் இளைஞரணி தலைவர்
  கிருஷ்ணன் சங்கரன்கோவில் நகர துணைத் தலைவர் கணேசன் நெல்கட்டும்சேவல் நிர்வாகிகள் மாரிச்சாமி முத்துராமலிங்கம் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari