lion 2 - 2026

அடப்பாவிகளா.. எவன்டா என்னை தள்ளி விட்டது.. சிங்கத்துக்கு வந்த சோதனை!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
lion 2 - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிங்கங்களுக்கு வலிமையுடன், புத்திசாலித்தனமும் அதிகம். இவை கண்ணிமைக்கும் நேரத்தில் இரையைப் பிடித்து விடுகின்றன.

சிங்கங்கள் புத்திசாலித்தனமாக இரையை வேட்டையாடும் விதத்தை நாம் பலமுறை பார்த்துள்ளோம்.

சிங்கம் தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எப்படியோ கஷ்டப்பட்டு மரத்தில் ஏறிய பல சிங்கங்களை வீடியோவில் காண முடிகின்றது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் பல சிங்கங்கள் காட்டில் உள்ள அடர்ந்த மரத்தில் ஏறி ஓய்வெடுப்பதை காண முடிகிறது.

தீடிரென்று ஒரு சிங்கம் கீழே விழுகிறது. எப்படியோ முயற்சித்து அந்த சிங்கம் ஒரு மரக்கிளையை பிடித்துக்கொண்டு கீழே விழாமல் இருக்க முயல்கிறது. ஆனால் அது கீழே விழுந்துவிடுகிறது. கீழே விழுந்த சிங்கத்துக்கு வெட்கமாக இருக்கிறது.

தன்னை யார் தள்ளி விட்டது என்பதை தெரிந்துகொள்ள அது தலையை தூக்கி தனது நண்பர்களை பார்க்கிறது. விழுந்த வியப்பை விலக்கிக்கொள்ள சிங்கம் நன்றாக தலையை ஆட்டுகிறது. இருடா உங்களை அப்பறம் வைச்சுக்கிறேன்னு தலையை ஆட்டுவதாக இருக்கிறது.

சிங்கங்களின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ feline.unity என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.