3 மணி நேரத்தில் 500 மின்னல்கள்: நெல்லை மக்களை நிலைகுலைய செய்த இயற்கை

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை

rain and light - 2026

கோடை காலம் நெருங்கிவிட்ட நிலையில் தமிழகம் குடிதண்ணீர் உள்ளிட்ட தேவைகளுக்கு திண்டாடும் நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டமாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் நெல்லை , குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக உயர்ந்து வருகிறது

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அச்சன்புதூர், வடகரை பண்பொழி கணக்கப்பிள்ளை வலசை மேக்கரைப் பகுதிகளில் நேற்றிரவு சுமார் மூன்று மணி நேரம் விடாமல் மழை கொட்டியது. இந்த மூன்று மணி நேரத்தில் சுமார் 500 மின்னல்கள் தோன்றி அப்பகுதி மக்களின் கண்களைக் கூச வைத்தது இயற்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கடுமையான மின்னல் வெட்டியதால் இரவு முழுக்க அந்த பகுதி மக்கள் உறங்காமல் பீதியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த மழையால் சிற்றாறு, செண்பகாதேவி அருவிகளிலும் நீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் குற்றாலம் ஐந்தருவியில் உள்ள ஐந்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்து கொண்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை கோடை காலப் பயிர்களான கடலை, சோளம், உளுந்து போன்றவைகளின் சாகுபடிக்கு ஏற்றது என்று அப்பகுதி விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.