ஸ்ரீரங்கம்: திமுக வேட்பாளர் மனுத் தாக்கல்

உள்ளூர் செய்திகள்

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்த் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் திருச்சி சிவா, கே.என்.நேரு ஆகியோர் இருந்தனர். ஆனந்த் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் அதிகாரி வருவாய் கோட்டாட்சியர் மனோகரனிடம் தாக்கல் செய்தார். பின்னர், தேர்தல் பிரசாரத்தை ஸ்ரீரங்கம் கோயில் பிரதான கோபுரம் முன்னர் இருந்து திமுகவினர் துவங்கினர். ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் முன்னதாக அதிமுக சார்பில் வளர்மதி போட்டியிடுகிறார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூ சார்பில் இன்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். திமுக சார்பில் பொது வேட்பாளராக அறிவிக்குமாறு முன்னர் திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டும், அதை நிராகரித்துவிட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப் படுகிறார். இன்னும் பாஜக வேட்பாளரை அறிவிக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.