மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால் ஆத்திரம்.. ‘அதை’ துண்டித்துக் கொண்ட கணவன்!

Published:

chopped organ knife - 2026

சென்னை: குடும்பத்துக்குள் ஏற்பட்ட அடிதடி சண்டையைத் தொடர்ந்து மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால், ஆத்திரமடைந்த கணவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு சென்னையின் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில் பிறப்புறுப்பை வெட்டிக் கொண்டார்.

சுனாமி குவார்ட்டர்ஸில் வசிக்கும் 40 வயதான பாபு, 35 வயது தேவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதை சாக்கிட்டு அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்களாம். பாபு வழக்கமான ஒரு டாஸ்மாக் வாடிக்கையாளராக, குடிகாரராக இருந்தார், தேவி அவரது குடிப் பழக்கத்திற்கு எதிராக, சண்டையிட்டுக் கொண்டிருந்தார், இதன் காரணமாக அவர் அடிக்கடி தன் தாய் வீட்டுக்குச் சென்று விடுவாராம்.

இதனிடையே, தேவி பாபுவிடம் இருந்து விவாகரத்து கோரியதாகவும், அதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை தனது தாய் வீட்டுக்கு அவர் கிளம்பிச் சென்று விட்டதாகவும் தெரிகிறது. அப்போது கணவர் பாபு சமாதானப் படுத்தியுள்ளார்.

பின்னர், செவ்வாயன்று தனது கணவருடன் புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாட அவர் வந்துள்ளார். ஆனால் அப்போதும் பாபு மது அருந்தியதால், மீண்டும் இதே பிரச்னையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு தேவி மீண்டும் தனது தாய் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதற்கிடையில், மனைவி தன்னை விட்டு சென்றுவிட்டதால், ஆத்திரமடைந்த பாபு சமையலறைக்குச் சென்று கத்தியை எடுத்து, தனது பிறப்புறுப்பை வெட்டிக் கொண்டுள்ளார்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

வலிதாங்க முடியாத அவர், பின்னர் உரத்த குரல் எடுத்து கத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதை அடுத்து பாபு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img