பேஸ்புக்கில் ’போர்ன்’ தூண்டில்: சிக்கிய 1,10,000 கணக்குகளில் ’மால்வேர்’ மூலம் தகவல் திருட்டு

சற்றுமுன்

facebook_2 இணையத்தில் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், போர்னோக்ராபி எனப்படும் செக்ஸ் தொடர்பான தகவல் அளித்து அதன் மூலம் மால்வேர் பரப்பியதில், 1,10,000 பேஸ்புக் அக்கவுண்ட்கள் மூலம் கடந்த இரு நாட்களில் பலரின் முக்கியமாக தகவல்கள் திருடப் பட்டுள்ளதாம். டெய்லி ஸ்டார் பத்திரிகை மூலம் வெளியான தகவலின்படி… பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட பெட்டியில் சேரும் ஒரு செய்தியை வெறுமனே க்ளிக் செய்தால், அது, ப்ளாஷ் ப்ளேயர் அப்டேட்டை டவுன்லோட் செய்தால் இதனைப் பார்க்க முடியும், அதனை அப்டேட் செய்து பார்க்க என்று செய்தி வந்ததாம். அதனை க்ளிக்கிய பயனாளிகளின் கணினியில் இந்த மால்வேர் புகுந்து கொண்டு, முக்கியமான தகவல்களை திருடியதாம். மேலும், அது, அந்தப் பயனாளியின் 20 நட்பு கணக்குகளுக்கு தாமாகவே பார்வர்ட் ஆகி, அவர்களுக்கும் அதே மெசேஜை அளித்ததாம். இது, இதுவரை வந்த மால்வேர்களை விட மிகவும் அபாயகரமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தத் தகவல் தெரிந்தவுடன், பேஸ்புக் நிறுவனமே இந்த மால்வேர் பரவவிடாமல் தடுத்துநிற்க வழி செய்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.