Hawk - 2026

பாய்ந்து பிடிக்க வந்த பருந்தை பதைபதைக்க வைத்த பாம்பு!

சற்றுமுன் அடடே... அப்படியா?
Hawk - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

வானில் பறக்கும் பறவைகளில் பருந்து மிகவும் ஆபத்தான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தனது நகங்களைக் கொண்டு தனது இரையைப் பிடித்து விட்டால், அந்த இரை அதன் பிடியில் இருந்து தப்பிப்பது மிகக்கடினம்.

ஆனால் இந்த ஆபத்தான பருந்தையும் ஒரு சிறிய பாம்பு தோற்கடித்து விடுகிறது. பருந்துக்கு உயிரைக் காப்பாற்றிக்கொள்வதே கடினமாகி விடுகிறது.

தற்போது இப்படிப்பட்ட ஒரு வீடியோ இணைய உலகில் பரவி வருகிறது. இந்த வீடியோ பாம்புகள் மற்றும் கழுகுகள் தொடர்பானது. இந்த வீடியோவில் நடப்பதைப் பார்த்தால் மனம் பதபதைக்கிறது.

இந்த வீடியோ வெளிவந்த உடனேயே ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமானோர் அதை லைக் செய்துள்ளனர்.

சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவில், வானில் பறந்து கொண்டிருந்த பருந்து திடீரென சிறிய பாம்பு ஒன்றை காண்கிறது.

சிறிய பாம்பை எளிதாக இரையாக்கி விடலாம் எனக் கருதி, பருந்து அதைப் பார்த்த உடனேயே தரையில் இறங்குகிறது. பின்னர் தனது ஆபத்தான நகங்களால் பாம்பை பிடிக்க முயல்கிறது.

வீடியோவில் இதற்குப் பிறகு காணப்படும் காட்சிகள் ஆச்சரியத்தை அளிக்கின்றன. பொதுவாக பருந்து பாம்பை எளிதாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடும். ஆனால் இந்த வீடியோவில் அதற்கு மாறான விஷயங்கள் நடக்கின்றன.

பருந்து பாம்பை அதன் நகங்களால் பிடித்தவுடன், பாம்பும் உடனடியாக பருந்தின் உடல் மீது முழுமையாக சுற்றிக்கொள்கிறது.

பாம்புக்கும் பருந்துக்கும் இடையே கடுமையான சண்டை நடக்கின்றது. இறுதியில் பாம்பை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை ஏற்றுக்கொள்கிறது.

வேட்டையாட வந்த பருந்தே தன் உயிரை காப்பாற்ற கஷ்டப்படும் நிலைமை அங்கு ஏற்படுகின்றது. பாம்பும் பருந்தும் தரையில் சண்டை இடுவதைப் பார்த்த ஒரு நபர் அங்கு வந்து பருந்தை பாம்பின் பிடியில் இருந்து காப்பாற்றுவதை வீடியோவில் காண முடிகின்றது.

வீடியோ எப்போது, ​​​​எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இது அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் nature27_12 என்ற பெயரில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு மக்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.