ஹாலிவுட் தயாரிப்பாளர் 1 மில்லியன் டாலர் ஜாமீனில் விடுதலை

உலகம் சற்றுமுன்

01 May26 world - 2026பாலியல் தாக்குதல், துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் போலீசில் சரணடைந்த முன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன்  தம்முடைய பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதாகவும், ஜிபிஎஸ் டிராக்கர் அணிந்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்து ஒரு மில்லியன் டாலர் ஜாமீனில் விடுதலையானார்.

பிரபல ஹாலிவுட் நடிகைகள் உள்ளிட்ட பலர் வைன்ஸ்டீன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அளித்ததை அடுத்து நேற்று அவர் அமெரிக்காவின் நியூயார்க் போலீசில் சரணடைந்தார். விருப்பத்துக்கு மாறாகத் தாம் யாருடனும் பாலுறவு கொள்ளவில்லை என்று கூறி தம்மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.