ஓமானில் வீசி வரும் மெகுனு புயல் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்கும் பணியில் ஒரு ஹெலிகாப்டர் மற்றும் இரண்டு இந்திய கடற்படை படகுகள் ஈடுபட்டுள்ளன.
மெகுனு என்று பெயரிடப்பட்டுள்ள புயல் ஓமனில் கடும் வேகத்தில் வீசி வருகிறது. ஓமன் நாட்டின் தென்பகுதி இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. புயலில் ஒரு 12 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும் நால்வர் காயமடைந்தனர்.
புயலில் தூக்கி வீசப்பட்ட அந்த சிறுமி ஒரு சுவரில் மோதி உயிரிழந்தார். டோஃபர் மற்றும் அல்-உஸ்டா மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டதை அரசுத் தொலைக் காட்சி வெளியிட்ட காணொளிகள் காட்டுகின்றன. பல டஜன் வாகனங்களும் அந்த வெள்ளத்தில் மூழ்கிக்கிடந்தன.
ஓமானில் வீசிய மூன்றாவது பெரிய புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது



