புதுமணத் தம்பதியுடன் சாலைமறியலில் ஈடுபட்ட ஸ்டாலின்!

Published:

stalin darna - 2026

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சென்னையில் பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தின. அப்போது, ஸ்டாலின் திமுகவைச் சேர்ந்த புதுமண தம்பதிகளுடன் போராட்டம் நடத்தினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராடி வந்தனர். இந்தப் போராட்டத்தின் 100வது நாளில் வன்முறையாளர்கள் உள் கலந்தனர். இதனால் போராட்டம் திசை மாறியது. தூத்துக்குடி பனிமய மாதா சர்ச்சில் இருந்து துவங்கிய ஊர்வலம் கடந்த செவ்வாய்க் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தீயிட்டுக்  கொளுத்தி, ஸ்டெர்லைட் குடியிருப்யில் வாகங்களைத் தீக்கிரையாகி, வீடுகளுக்கு தீவைத்து, போலீஸாரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கல்லெறிந்து வன்முறை தலைவிரீத்தாடியது. இதனால், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், தமிழக அரசின் இந்தக் கொடூரச் செயலுக்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து, சென்னையில் மறியல் போராட்டம் நடத்தின.

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில், திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

இதில் மதுராந்தகம் பகுதியில் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் திமுக.,வைச் சேர்ந்த புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்த கையோடு, நேரடியாக மணக்கோலத்தில் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஸ்டாலினும் அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கே வந்த போலீஸார் செங்கல்பட்டு அருகே அச்சிறுப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்ட  ஸ்டாலின் மற்றும் தொண்டர்களைக் கைது செய்தனர். புதுமண தம்பதிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கைது செய்யப்பட்டனர்.

Related articles

Recent articles

spot_img