அர்விந்த் கேஜ்ரிவால் துணை நிலை ஆளுநர் பனிப்போர்: உள்ளிருப்புப் போராட்டமும் உடன்படா முடிவுகளும்!

இந்தியா சற்றுமுன்

aap dharna at LG office - 2026

புதுதில்லி:  கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் மூன்றாவது நாளாகத் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை தில்லி துணை நிலை ஆளுநர்  சந்திக்க இயலாது என்று மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

 

தில்லியில் முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களை கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எவரும் சந்திப்பதில்லை என்றும், அரசு கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.  இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நேற்றுமுன்தினம் மனு அளிக்கச் சென்ற முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களை, துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் சந்திக்க மறுத்துவிட்டார்.இதையடுத்து, துணை நிலை ஆளுநர் வீட்டின் வரவேற்பறையில், அவர்கள் அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ias officers strike delhi - 2026

இதனிடையே தில்லி தலைமைச் செயலாளர் அன்ஸு பிரகாஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 4 மாதத்திற்கும் மேலாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அரசு நிர்வாகம் முடங்கிப் போயுள்ளது.

ஆனால், அதிகாரிகளின் இந்தப் போராட்டங்களை மத்திய அரசும் ஆளுநரும் தூண்டிவிட்டு தில்லி அரசின் நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்வதாக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

 

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும்படி கேஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார். ரேஷன் அட்டையை நேரடியாக வீட்டிற்கே சென்று கொடுக்கும் தமது அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தை நடத்துவதாகவும் ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், அரசியல் செய்து ஆட்சிக்கு வருவார்கள், ஆட்சிக்கு வந்தபின்னும் தங்கள் ஆட்சியிலேயே அரசியல் செய்வதை ஆம் ஆத்மி கட்சி மட்டுமே செய்ய முடியும் என்று தில்லிவாசிகள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.