பெங்களூரு: கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்ட மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், 6ல் 4 இடங்களில் பாஜக., வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டபைத் தேர்தலில் பாஜக., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அக்கட்சி, 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற 7 உறுப்பினர்கள் குறைவாகப் பெற்றதால், ஆட்சி அமைக்க இயலாமல் போனது. இதை அடுத்து காங்கிரஸ் -மஜத கட்சிகள் திடீரென கூட்டணி அமைத்து, ஆட்சியில் இருந்து வருகிறது.
இந்நிலையில், பட்டதாரிகள், ஆசிரியர்கள் ஆகியோரைத் தேர்வு செய்யும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. ஆறு காலி இடங்களுக்காக நடைபெற்ற இந்தத் தேர்தல் கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக., தனித்துப் போட்டியிட்டது. காங்கிரஸ், மஜத.,வும் தனித்தனியாகப் போட்டியிட்டன.
இந்தத் தேர்தல் முடிவுகளில் 4 இடங்களில் பாஜக., வெற்றி பெற்றது. 2 இடங்களில் மஜத., வெற்றி பெற்றது.




