கொல்லப் பார்ப்பான் ராகுல்: கட்டிப்புடிப்பதை மோடி அனுமதித்திருக்கக் கூடாது: சுப்பிரமணிய சாமி கண்டிப்பு!

இந்தியா சற்றுமுன்

rahul modi parliament - 2026

ராகுல் காந்தி தம்மைக் கட்டிப்பிடிப்பதை பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது. ரஷ்யர்களும் கொரியர்களும் மற்றவர்க்ரள் மீது விஷ ஊசிகளை செலுத்த இந்த முறையைக் கடைப்பிடிப்பார்கள்.

ஆகவே பிரதமர் மோடி வெகு விரைவாக ஒரு மருத்துவமனைக்குச் சென்று சுனந்தா புஷ்கர் கையில் இருந்தது போல் தம் மீது ஏதாவது விஷ ஊசி செலுத்தப் பட்டிருக்கிறதா என்பதை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார் சுப்பிரமணிய சுவாமி.

தனது டிவிட்டர் பதிவில் சுவாமி தெரிவித்துள்ள இந்தக் கருத்தை இப்போது பலரும் விவாதித்து வருகிறார்கள். பொதுவாக பிரதமர் மோடி மற்றவருடன் கை குலுக்குவதையே தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர் பாதுகாப்புக் குழுவினர்.

அண்மையில் மகாராஷ்டிர போலீஸார், பிரதமர் மோடியின் உயிருக்கு பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாகவும், எனவே மோடி பாதுகாப்பு நடைமுறைகளை மீறி, மக்களுடன் சென்று பழகுகிறேன் என புரோட்டோகாலை மீறக் கூடாது என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், சுப்பிரமணிய சுவாமியின் டிவிட்டர் பதிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலரும் சுவாமியின் டிவிட்டர் பதிவு குறித்து விவாதித்து வருகிறார்கள். ஏற்கெனவே மோடி வேறு, உங்களுக்கு பிரதமர் பதவியில் அமர்வதற்கு அப்படி என்ன அவசரம் என்று கேட்டதும் சேர்த்து இப்போது விவாதிக்கப் பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.