100மீ ஓட்டத்தில் வெள்ளி வென்ற டுட்டீ சந்த்-விற்கு 1.50 கோடி ரூபாய் பரிசு- ஒடிசா முதல்வர்

விளையாட்டு

13 Aug27 Dutee chand - 2026

ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் கலந்து கொண்டார். தகுதிச் சுற்றில் சிறப்பாக ஓடிய டுட்டீ சந்த் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் சீனா (2), பஹ்ரைன் (2), கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், மலேசியா ஆகிய வீராங்கனைகளுடன் டுட்டீ சந்த் பதக்கத்திற்கு மல்லு கட்டினார். விசில் ஊதியதும் டுட்டீ சந்த் சிட்டாக பறந்தார். இதனால் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 11.32 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த 2-வது இடம் பிடித்தார்.

பஹ்ரைன் வீராங்கனை எடிடியோங் ஓடியோங் 11.30 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த தங்கப்பதக்கம் வென்றார். டுட்டீ சந்த் 0.2 வினாடியில் தங்கத்தை பறிகொடுத்தார்.

இந்நிலையில் வெள்ளி பதக்கம் வென்ற டுட்டீ சந்த்-விற்கு 1.5 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று ஒடிசா முதல் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.