தமிழகத்தின் மிகப் பெரிய கார்ப்பரேட் முதலாளி ஸ்டாலினை வீழ்த்துவோம்: ஹெச்.ராஜா அழைப்பு!

சற்றுமுன்
raja h interview - 2026

தமிழகத்தின் மிகப் பெரிய கார்ப்பரேட் முதலாளி ஸ்டாலினை வீழ்த்துவோம் என்று ஹெச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில், 1967ல் ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்! ஒரு படி நிச்சயம்! என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து தமிழர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த ஊழல் திமுக., பாஜக வை விமர்சிப்பது யாரை ஏமாற்ற? சாமானியன் வேஷம் போட்டு இன்று தமிழகத்திலேயே மிகப் பெரிய கார்ப்பரேட் முதலாளி மு.க.ஸ்டாலினை வீழ்த்துவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி கூட்டியுள்ள பாஜக.,வுக்கு எதிரான பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி கூறிய பொய்களில் மிகப்பெரிய பொய் கருப்புப் பணத்தை மீட்பேன் என்பதுதான் என்று கூறினார். மேலும், “மம்தா பானர்ஜியை இரும்புப் பெண்மணி”என்று புகழாரம் சூட்டிய ஸ்டாலின், பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே நமது அனைவரின் சிந்தனை, இந்த பேரணியின் நோக்கம். இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்காக இங்கு கூடியிருக்கிறோம் என்று கூறினார். கொல்கத்தா பேரணியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

இந்நிலையில், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா இப்படி ஒரு டிவிட்டை பதிவிட்டிருக்கிறார்…

1 thought on “தமிழகத்தின் மிகப் பெரிய கார்ப்பரேட் முதலாளி ஸ்டாலினை வீழ்த்துவோம்: ஹெச்.ராஜா அழைப்பு!”

  1. சபாஷ். ஆனால் உண்மை கசக்குமே இவர்களுக்கு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.