முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை நினைவு கூர்ந்த டாக்டர் தமிழிசை!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

tamilisai soundarrajan 1 - 2026

இந்தியாவின் முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாள். ஆணுக்கு பெண் இங்கே இளைப்பில்லை காண் என்ற பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக சாதித்துக் காட்டியவர். புதுக்கோட்டை திண்ணைப் பள்ளியில் படித்து சென்னை மருத்துவக் கல்லூரியில் முதல் பெண் மருத்துவரான 1907-1912 பெருமையுடன் நினைவில் வாழ்க..

பெண் மருத்துவ சாதனையாளர் உயர்படிப்பு ஆராய்ச்சியாளரானதோடு மருத்துவ தொண்டு மட்டும் போதுமென்று நின்றுவிடாமல் பொதுவாழ்வில்இணைத்துக்கொண்டு பின்னாளில் சென்னை மாநகராட்சியின் துணை மேயரானார்.அவர்பிறந்த நாளை அரசு மருத்துவமனை தினமாக கொண்டாடும் @CMOTamilNadu @Vijayabaskarofl பாராட்டு – என்று குறிப்பிட்டுள்ளார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

முன்னதாக, தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூலை 30ம் தேதி மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

muthulakshmireddy - 2026இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில்…

தமிழகத்தில், மருத்துவமனைகள் தினத்தை, ஒவ்வொரு மருத்துவமனையும், ஏதாவது ஒரு நாளில் கொண்டாடி வந்தன. இந்தாண்டு முதல் நாட்டின் முதல் பெண் டாக்டர், முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளான ஜூலை, 30ல், மருத்துவமனை தினத்தை கொண்டாட, அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சென்னை மருத்துவக் கல்லுாரியில் 1907ல் மருத்துவம் பயின்றார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை துவங்க காரணமாக இருந்தார்.
சட்டசபையில் முதல் பெண் எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தார். எனவே, முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளான இன்று, தமிழகத்தில் மருத்துவமனை தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை 30ம் தேதி மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும்.

மருத்துவமனை தினத்தை கொண்டாட அரசு மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விழாவைக் கொண்டாட ‘மருத்துவமனை தினக் குழு’வும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவமனையின் பல்வேறு சேவைகளை காட்சிப்படுத்துதல், மருத்துவமனையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் தொண்டு நிறுவனங்கள், கொடையாளர்கள், சமூக அமைப்புகள் மற்றும் நன்கொடை அளிக்கும் நிறுவனங்களையும் அங்கீகரித்து பாராட்ட வேண்டும்… என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.